Categories
மாநில செய்திகள்

குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…. அரசு நடவடிக்கை எடுக்க…. ரவிக்குமார் எம்பி வலியுறுத்தல்…!!!

இந்தியாவில் குழந்தைகள் பகுதி நேர அல்லது முழு நேர அடிப்படையில், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் நடைமுறை உள்ளது. இந்நடைமுறை அவர்கள் குழந்தைப் பருவத்தைப் பறித்து, அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வறுமை, நல்ல பள்ளிகள் மற்றும் முறைசாரா பொருளாதாரம், வளர்ச்சி இல்லாமை இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் நடைமுறை இருக்க முக்கிய காரணங்கள் என கருதப்படுகிறது.

இந்நிலையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமான இன்று உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் எம்.பி ரவிக்குமார், கொரோனா காலத்தில் தமிழ் நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாகவும், தொழிலாளர் நலத்துறையும், பள்ளிக்கல்வித்துறையும்  ஒருங்கிணைந்து உத்திகளை வகுப்பதன் மூலமே இதனை சரி செய்ய முடியும். எனவே முதலமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |