வளரிளம் தொழிலாளர்களை பணிக்கமர்த்திய மூன்று உரிமையாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினரை தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். இவ்வாறு சட்டத்தை மீறி பணிக்கு அமர்த்தப்படும் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
இந்த நிலையில் ஆட்சியர் உத்தரவின்படி ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது வளரிளம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மூன்று பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மூன்று வளரிளம் தொழிலாளர்களை மீட்டனர். இதில் மூன்று உரிமையாளர்களுக்கும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.