Categories
மாநில செய்திகள்

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை தினம்….. இதையெல்லாம் செய்ய வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குழந்தைகள் கால் முளைத்த கவிதைகள், குழந்தை பருவம் விளையாடி மகிழும் இனிய பருவம். துள்ளித் திரிந்து, பட்டாம் பூச்சிகளைப் போல சிறகடித்து பறந்து மகிழும் குழந்தை பருவத்தில் பள்ளிக்குச் சென்று துள்ளி விளையாடி, கல்வி பயிலவும், உடன் பயிலும் மாணவர்களுடன் கதைபேசி கழிக்கவும் முடிந்தால்தான் குழந்தை பருவம் முற்று பெறும். அப்படி செய்யாமல் அவர்களை வேலைக்கு செல்ல பணிந்து, சொற்பத் தொகைக்காக அவர்களின் பொன்னான எதிர்காலத்தை பாழ்படுத்தி அவர்களின் குழந்தை தனத்தை திருடுவது ஒரு தீவிர சமூகக் குற்றமாகும்.

அதனை தொடர்ந்து குழந்தை தொழிலாளர்களை உருவாக்கி, அவர்களின் வியர்வை சுரண்டி சிலர் வளம் பெறுவதற்கு எதிராக விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்த உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் திங்கள் 12 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பு உரிமை, கல்வி உரிமை, வாழும் உரிமை உரிமைகளை பறிப்பது இயற்கை நியதிக்கும் மட்டுமல்ல சமூகநீதிக்கும் எதிரானது ஆகும். எனவே குழந்தைகளை எந்த வகையிலும் ஊதியத்திற்காக அவர்களின் உழைப்பை உறிஞ்ச கூடாது என்றும் அபாயகரமான தொழிலில் வளர் இளம் பருவத்தினரை ஈடுபடுத்தக் கூடாது என்றும் உறுதி ஏற்போம். தமிழ்நாடு அரசு குழந்தை தொழிலாளர் முறையை அறவே ஒழிக்க யாராவது பாடுபடுகிறது, தகவல் கிடைத்தால் விரைந்து செயல்பட்டு பணியில் அமர்த்தப்பட்ட குழந்தைகளை மீட்டு அவர்களது உரிமைகளைப் பேணி மீண்டும் கல்வியைத் தொடர செய்து, தொலைந்து போன குழந்தை பருவத்தை மீண்டும் அளித்து அவர்களை மலரச் செய்கிறது.

இதனையடுத்து குழந்தைகளை படிக்க வைப்பது பெற்றோருக்கு ஒரு பாரமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக தான் கட்டணமின்றி புத்தகங்கள், சீருடைகள், பள்ளிக்கு செல்ல புத்தகப்பை, மதிய உணவில் முட்டை யோடு ஊட்டச்சத்து நிறைந்த உணவு, கல்விக்கான உபகரணங்கள், இலவச பேருந்து வசதி என எண்ணற்ற உதவிகளை அரசு வழங்கி வருகிறது. எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என்று உறுதி ஏற்க வேண்டும் என்றும் மற்றொர் குழந்தைகளை பணிக்கு அமர்த்த மாட்டோம் என்று தீர்மானிக்க வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து எங்கேயாவது ஒரு குழந்தை பணிக்கு அமர்த்தப்பட்டாலும் அரசுக்கு தகவல் தர வேண்டும். மேலும் புன்னகை பூத்து குதூகலிக்க வேண்டிய குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை தமிழக அரசு அனுமதிக்காது. இந்த முயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |