ஒவ்வொரு மாதமும் ஏகாதசி விரதம் இருந்தால் அதற்கு பலன் கிடைக்கும். அதிலும் திங்கட்கிழமை ஏகாதசி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு புராண நிகழ்வில் கூறப்பட்டுள்ளதாவது, பணக்காரர் ஒருவர் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததை முனிவர் ஒருவரிடம் தெரிவித்து என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த முனிவர் தாகத்தோடு வந்த பசுவையும், கன்றையும் கடந்த ஜென்மத்தில் நீ அடித்து விரட்டியதால் உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே வளர்பிறை ஏகாதசியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறியுள்ளார். அதன்படி அந்த பணக்காரர் ஏகாதசி விரதத்தை கடைபிடித்ததால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. மேலும் ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை வழிபட்டு வயதானவர்களுக்கு தானம் செய்தால் அனைத்து நன்மைகளும் கிட்டும்.
Categories