Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்ததை கூட அறியாமல்…. வெளிநாட்டில் மர்மமாக இறந்த வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற வாலிபர் மர்மமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆண்டிகுளப்பன்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தீபிகா என்ற மனைவியும், பிறந்து 20 நாட்களை ஆன ஆண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு செந்தில்குமார் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வளைகாப்பு விழாவிற்கு வருவதாக செந்தில்குமார் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் குழந்தை பிறந்த தகவலை கூட தெரிவிக்க முடியாமல் தீபிகாவும், குடும்பத்தினரும் மிகவும் சிரமப்பட்டனர். நேற்று காலை குவைத்தில் இருக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் செந்தில்குமார் இறந்துவிட்டதாக செல்போன் மூலம் தகவல் கிடைத்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். கர்ப்பிணி மனைவியை விட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பிரிந்து வெளிநாடு சென்ற வாலிபர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |