Categories
தேசிய செய்திகள்

குழந்தை பிறந்து 4 நாள்… அடுத்தடுத்து தந்தை தாய் மரணம்.. வெளி வந்த அதிர்ச்சி தகவல்..!!

பெண் குழந்தை பிறந்ததையடுத்து தொடர்ந்து கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகர்டலாவைச் சேர்ந்தவர்கள் பிரன் கோவிந்தா-சுப்ரியா தாஸ் தம்பதியினர்.  சமீபத்தில் கர்ப்பமாக இருந்த சுப்ரியா பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.  ஆனால் ஆண் குழந்தையை எதிர்பார்த்த கோவிந்தா மற்றும் அவரது குடும்பத்தினர் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே மனைவியிடம் தொடர்ந்து கோவிந்தா சண்டை போட்டு வந்திருக்கிறார். மேலும் பெண் குழந்தை பிறந்து விட்டதே என மன வேதனை அடைந்த கோவிந்தா குழந்தை பிறந்த 4 நாட்களில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி தகவலை கேட்ட சுப்ரியா கடுமையான மாரடைப்பு வந்து அவரும் இறந்துவிட்டார். இது தொடர்பாக சுப்ரியா வீட்டின் அருகே வசிப்பவர்கள் கூறும்போது பெண் குழந்தையை ஏன் பெற்றாய், பெண் குழந்தை நமது வீட்டிற்கு கெடுதல் என அவரது மாமியார் மிக மோசமாக திட்டியதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவத்தில் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |