கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஆபாச பாடம் எடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றன. இந்நிலையில் அந்த பள்ளியில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் 11 மற்றும் 12ம் வகுப்பிற்கு அக்கவுண்ட்ஸ் பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்துவ தாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவ மாணவியர்களுக்கு ஆபாச வகுப்பு நடத்தியுள்ளார் .
மாணவிகளுக்கு சம்பந்தம் இல்லாத வகையில் ஆபாசமாக பேசி முகம் சுளிக்கும் வகையில் செக்ஸ் பாடம் எடுத்துள்ளார். இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூற அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து ஆசிரியர் மீது போக்ஸோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் மாணவிகள் தெரிவித்ததாவது: ” அந்த ஆசிரியர் எப்போதும் இரட்டை அர்த்தத்தில் தான் பேசுவார். மேலும் குழந்தை பிறப்பது எப்படி என்பது பற்றி பச்சையாக பாடம் எடுக்கிறார். யாராவது அந்த சமயத்தில் முகம் சுளித்தால் நீங்க எல்லாம் அப்படித்தான் வந்தீங்க என்று சொல்லுவார்” என வாக்குமூலம் அளித்துள்ளனர்.