Categories
பல்சுவை

“குழந்தை போல் உருண்டு புரண்டு அடம்பிடிக்கும் குட்டியானை”…. இணையதளத்தில் வைரல் வீடியோ….!!!

தற்போதைய உலகத்தில் இணையத்தில் பலவிதமான வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் பல வீடியோக்கள் நம்மை சிந்திக்க, சிரிக்க, ஆச்சரியம், அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்துகிறது. அதனை போல விலங்குகள் தொடர்பான வீடியோக்களை தினமும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. அதாவதுயானைகள், குரங்குகள் மற்றும் டால்ஃபின்கள் போன்றவை மற்ற விலங்குகளை போல அன்றி விதிவிலக்காக புத்திசாலித்தனமானது உயிரினங்கள். யானைகளும் நம்மை போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டது.

அதுவும் குட்டி யானைகள் ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கு ஓடிக்கொண்டே இருக்கும். யானையின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் சில சமயங்களில் வினோதமாகவும் இருப்பதால் அவை நம் மனதில் மகிழ்விக்கிறது. இந்நிலையில் சிறு குழந்தை போல அடம்பிடிக்கும் குட்டி யானை ஒன்றின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வனப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது போல தோன்றுகிறது. அதில் குட்டி யானை குழந்தை அடம்பிடிப்பது போல் சாலையில் உரண்டு புரண்டு அடம் பிடிக்கிறது. ஆனால் அதை சமாதானம் படுத்தும் எண்ணம் எதும் தாயிடம் இல்லை போலும் தெரிகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் குட்டி யானையின் குறும்பை மிகவும் ரசித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |