ராமநாதபுரம் திருப்புல்லாணி திருத்தலம் அருகே உள்ள பெருமான் கோயிலில் வழிபாடு செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயமாக கருதப்படுவது ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி திருத்தலம் அருகிலுள்ள ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் தான் அது. குழந்தை இல்லாமல் வருந்தி வந்த தசரத மகாராஜா பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவதூதர் ஒருவர் பாயாசத்தை அவருடை மனைவி மூன்று பேருக்கும் கொடுக்க சொன்னார். இதைத் தொடர்ந்து அவரது மனைவிகளுக்கு ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் ஆகிய குழந்தைகள் பிறந்தன.
இதை ஐதீகமாக கொண்டு குழந்தை வரம் வேண்டும் என நினைக்கும் தம்பதியினர் அதிகாலையில் கடலில் நீராடிவிட்டு கோயிலுக்கு வந்து நாகர் சிலை முன்பு ஒரு நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். பின்னர் அன்று இரவு கோவிலில் தங்கி மறுநாள் காலையில் நாகப் பிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டி யாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்து பிரசாதமாக தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அங்கு பின்பற்றப்படும் ஐதீகம்.