Categories
உலக செய்திகள்

“குழப்பத்திலிருந்து ஹாங்காங்கை ஆட்சிக்கு மாற்றம்”… தைவான் விவகாரத்தில் உறுதி… சீன அதிபர் பேச்சு…!!!!!

சீன நாட்டின் அதிபராக ஜி ஜின்பிங் செயல்பட்டு கொண்டிருக்கிறார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இந்த கட்சியின் தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார் அந்த வகையில் கடந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற கூட்டத்திலும் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

இதில் ஒரு வாரம் நடைபெறும் இந்த கூட்டத்தை சீன அதிபரும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜஜின் பிங் தலைமை ஏற்று தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுமார் 2,300 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று இருக்கின்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் சீனாவின் அதிபராக ஜி ஜின் பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றார். கம்யூனிஸ்ட் தேசிய காங்கிரஸ் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் ஹாங்காங் சீனா முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது குழப்பத்தில் இருந்து ஹாங்காங்கை ஆட்சிக்கு மாற்றி இருக்கிறது. மேலும் தைவான் பிரிவினைவாதம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்ப்பதில் சீனா உறுதியாகவும் பெரும் போராட்டத்தையும் மேற்கொண்டு வருகிறது என கூறியுள்ளார்.

Categories

Tech |