Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“குழப்பத்தை ஏற்படுத்திட்டாங்க” நான் வாங்கமாட்டேன்…. மனைவியின் சடலத்தை ஏற்க மறுத்த கணவன்…!!

தற்கொலை செய்துகொண்டமனைவியின்  சாவில் மர்மம் இருப்பதாக கூறி கணவன் உடலை வாங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகே இருக்கும் தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரசு பேருந்து நடத்துனராக அருணாச்சலம். இவருக்கும் உறவினர்களான வாசுகி  என்பவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வாசுகி  தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று வாசுகி  காவல்துறையினரால் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் தனது தாய்  வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் வாசுகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்து வாசுகியின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க இருந்த நிலையில் அவரது கணவர் அருணாச்சலம் தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சிலர் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அவர்களை தண்டிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அவர்களைத் திருப்பி அனுப்பினார்.

Categories

Tech |