Categories
தேசிய செய்திகள்

குழப்பம் வேண்டாம்…! இன்று (8.11.22) இங்கு மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை….. வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…..!!!!

நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் அறிவிக்கப்படும் தேசிய விடுமுறை தினங்களில் மட்டுமே செயல்படாது. மற்றபடி மாநில வாரியான பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். அதன்படி நவம்பர் மாதம் மொத்தமாக வார இறுதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டு, நான்காவது சனிக்கிழமைகளில் வரும் விடுமுறை தினங்கள் ஆறு நாட்கள் உள்ளது.

இதைத்தவிர வரும் நவம்பர் எட்டாம் தேதி இன்று குருநானக் ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்று குழப்பம் நிலவி வந்த நிலையில் லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும், மற்ற மாநிலங்களில் வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |