டெங்கு நோய்க்கும் கொரோனா தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என ஒன்றிய மருத்துவத்துறை மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
குளிர்கால கூட்டத் தொடரின்போது, மாநிலங்களவையில் நாட்டில் டெங்கு பரவுவது தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய மருத்துவத் துறை அமைச்சகம், நாட்டில் ஏற்படும் டெங்கு பாதிப்பை ஒன்றிய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ளது. மேலும் 2019ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பு 2,05,243 ஆக இருந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு 1,64,103 ஆக குறைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டெங்கு பாதிப்பு காரணமாக 2008-ஆம் ஆண்டு 1% குறைவாக உயிரிழப்பு பதிவான நிலையில் 2019ஆம் ஆண்டு 0.1% உயிரிழப்பு குறைந்துள்ளதாகவும், குறிப்பிடப்பட்டது. மேலும் கொரோனா தொற்றிற்கும்,டெங்கு பாதிப்பிற்கும் நேரடி தொடர்புகள் இருப்பதாக எவ்வித அறிவியல் பூர்வமான முடிவுகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.