ஹோட்டல் உரிமையாளரை வெட்ட முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கர்நகர் பூந்தோட்டம் தெருவில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சங்கர் நகர் பகுதியில் வசிக்கும் மதன் என்பவர் செல்லதுரையின் ஹோட்டலுக்கு சென்று புரோட்டா வாங்கியுள்ளார். அப்போது மதன் குழம்பு அதிகமாக தரும்படி கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன்பின் மதன் அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கடைக்கு வந்த மதன் செல்லதுரையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு தான் கொண்டுவந்த அரிவாளால் மதன் செல்லதுரையை வெட்ட முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து செல்லதுரை அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,