Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாக ஓடும் குடிநீர் …!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக சென்றது .

குடியாத்தம் அருகே உள்ள வேப்பூரில் சாலை ஓரத்தில் குடியாத்தம் கொட்ட சமுத்திரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நகரப் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. இதற்காக பூமிக்கடியில் குழாய்கள் அமைத்து அதன் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று காலை முதலே இந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகின்றது.

ஏற்கனவே குடியாத்தம் பகுதிகளில் குடிநீர் பஞ்சம் உள்ள நிலையில் தற்போது குடிநீர் வீணாக சாலையில் சென்று கொண்டிருப்பதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனை சரி செய்ய வேண்டிய நகராட்சி மற்றும் குடியாத்தம் ஊராட்சி அதிகாரிகள் தண்ணீர் வீணாவதை பற்றி கவலைப்படாமல் அலட்சியம் காட்டுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

Categories

Tech |