Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குழாயில் ஏற்பட்ட உடைப்பு…. துணிதுவைத்து குளித்த வாலிபர்கள்…. வைரலான வீடியோ…!!

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள சேர்ந்தமரம் பஜார் தெருவில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் வீணாகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 2 வாலிபர்கள் குடிநீர் வீணாகும் இடத்தில் துணி துவைத்து குளித்துள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும் குழாயில் ஏற்பட்ட அடைப்பை அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |