பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம்-பழையகோட்டை சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குடியிருப்பின் நுழைவாயில் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டினர். ஆனால் மாலை ஆகியும் குழி மூடாமல் இருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து நேற்று காலை குழி மூடப்பட்டுள்ளது.