Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குழியை சரியாக மூடவில்லை” மாணவிக்கு நடந்த விபரீதம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

குழாய் பதிப்பதற்காக தோண்டிய குழியை சரியாக மூடாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மருதமலை அடிவாரத்தில் இருந்து 5 கி.மீ தூரம் சாலையோரத்தில் குழிதோண்டி கியாஸ் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணி தற்போது 100 மீட்டர் மட்டுமே முடிக்கப்பட வேண்டும். அங்கு தோண்டிய குழியை சரியாக மூடவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரி மாணவியான லட்சுமி பிரியா என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக சென்ற போது அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த மாணவியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது குழாய் பதிப்பதற்காக தோண்டிய குழியை சரியாக மூடாததால் சாலை மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. எனவே குழியை முறையாக மூடி தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |