வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிலிப்பைன்ஸ் நாட்டு வெளியுறவு மந்திரியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
குவாட் அமைப்பு இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் குவாட் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஒன்று சமீபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் குவாட் நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
இதனை அடுத்து மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக்கொண்டு பிலிப்பைன்ஸ்க்கு மூன்று நாள் பயணம் சென்றார். இந்த பயணத்தில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவு மந்திரியான தீயோடோரோ எல் லோக்சீனை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருதரப்பு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்களை இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தினார்கள்.