தமிழகத்தில் மதுவின் மூலம் 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு ஒரு துறையை உருவாக்கி அந்தத் துறையின் கீழ் 10 ஆயிரம் ஊழியர்களை அரசு பணியமர்த்தி உள்ளது. 20 ரூபாய்க்கு ஒரு குவாட்டரை வாங்கி அதனை 106 ரூபாய்க்கு விற்க ஒரு அரசு தேவையா? இதுதான் அரசின் சாதனையா என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். நிதி இல்லை என்று கூறிக்கொண்டு அரசு நாடகம் ஆடி வருகிறது. சாதாரண பொதுமக்களுக்கு பயன்பெறக்கூடிய வகையில் அரசு எந்த திட்டங்களையும் அறிவிக்கவில்லை.
5000 கோடி மற்றும் பத்தாயிரம் கோடி என்ற அளவில் திட்டங்களை மாநில அரசு அறிவித்தால் சாதாரண மக்கள் அதன் மூலம் என்ன பயன் பெற முடியும். எந்த அரசுக்கும் வக்காலத்து வாங்குவதற்காக பாஜக கிடையாது. அரசின் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கும் சென்றடையக் கூடிய வகையில் இருக்க வேண்டும். ஊழல் இல்லா தமிழகம் உருவாக வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். மேலும் அரசுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி வருவாய் வரும் நிலையில் அதை வைத்து திமுக அரசு என்ன செய்கிறது என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்