Categories
தேசிய செய்திகள்

குவியல் குவியலாக சிறந்த ஆணுறைகள்… “ரகசிய அறை அமைத்து விபச்சாரம்”… விசாரணையில் அம்பலமான சம்பவம்…!!!

கர்நாடகாவில் ஆணுறைகளை சாலையில் வீசிய வழக்கில் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் கேத் சந்திரா பகுதியில் உள்ளது சென்னை -டெல்லி தேசிய நெடுஞ்சாலை. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குவியல் குவியலாக உபயோகப்படுத்தி தூக்கி வீசப்பட்டு இருந்த ஆணுறைலால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின் கேத்தாசந்திரா இப்பகுதியிலுள்ள நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த தங்கும் விடுதியில் ஏழு சுரங்க அறைகள் அமைக்கப்பட்டு அதனுள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக விபச்சாரம் நடத்தியதும், அங்கு பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை நெடுஞ்சாலையில் வீசி சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் போலீசார் ரகசிய அறையை கண்டு பிடித்தனர். மேலும் அங்கிருந்த பெண் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |