நடிகை ராஷி கண்ணா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்காநொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதை தொடர்ந்து இவர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன் டிவியில் ரிலீஸாக உள்ளது .
தற்போது நடிகை ராஷி கண்ணா திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மொழிப் படங்களிலும் ராஷி கண்ணா பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பட வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் ராஷி கண்ணா சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் புதிய படத்திற்காக ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.