Categories
தேசிய செய்திகள்

குஷியான Telegram-யின் செட்டை… நொந்து போன வாட்ஸ்அப்…!!!

டெலிகிராம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வாட்ஸ்அப்பின் புதிய அறிவிப்பை கேலி செய்து வருவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் அனைத்தும் இனி பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு பயனாளிகள் அனுமதி மறுத்தால் அவர்களின் கணக்கு நீக்கப்படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்ஆப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வாட்ஸ்அப் பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் Telegram அதன் ட்விட்டர் பக்கத்தில் whatsapp- யின் புதிய அறிவிப்பை கேலி செய்து உள்ளது. டெலிகிராம் செய்யும் இந்த சேட்டை இணையத்தளத்தில் மிகவும் வைரலாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அப்போது வாட்ஸ் அப்புக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம் என பலரும் பிளே ஸ்டோரை அலசி வருகின்றன. இந்நிலையில் டெலிகிராம் ஜாலியாக ட்விட் செய்து வருகிறது.

Categories

Tech |