Categories
மாநில செய்திகள்

குஷியில் மாணவர்கள்…! இனி PET பீரியடில் NO பாடம்…. அமைச்சர் ஸ்டிரிக்ட் கண்டிசன்…!!!

பிஇடி பீரியடில் மற்ற பாடங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி ஒருவர் கோரிக்கை விடுத்தார். இதுபற்றி பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார். அத்துறையோடு இணைந்து மேலும் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தப்படும். பள்ளிகளில் பிஇடி பீரியட் என்பது மாணவர்களின் புத்துணர்வுக்காக ஒதுக்கப்படும் நேரம். அந்த நேரத்தை மற்ற பாடங்களுக்காக ஆசிரியர்கள் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். அதுபோல், எங்காவது தொடர்ந்தால் மீண்டும் வலியுறுத்திக்கூறுவோம் என்றார்.

Categories

Tech |