தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்ததன் காரணமாக சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
இதற்கிடையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால்தடை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் 8 மாதங்களுக்கு பின் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்குட்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.