Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” அனைத்து குடும்பங்களுக்கும்… தமிழக அரசு செம அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் இந்த அட்டையில் இடம்பெற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ குறிப்புகள் அடிப்படையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும். மக்களை தேடிமருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல் படுத்தப்படும்.

இந்த அட்டையில் குடும்ப உறுப்பினர்களின்பெயர், வயது, தொழில் மருத்துவ குறிப்புகள் இடம் பெற்று இருக்கும் சென்னை மாநகராட்சி பகுதியில் சில குடும்பங்களுக்கு இந்த அட்டை வழங்கப்பட்டுள்ளது. தொலை தூரங்களில் உள்ள கிராமப் பகுதிகள், மலைப் பகுதிகள், மிகவும் பின் தங்கிய பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தியதால் சென்னையில் இந்த திட்டம் சற்று தாமதமாக தொடங்கப் பட்டுள்ளது என்றார்.

Categories

Tech |