கடந்த சில மாதங்களில் பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விலை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது காப்பர், அலுமினியம், ஸ்டீல் போன்ற மூலப் பொருட்களின் விலை குறைந்து வருகிறது. இதனால் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஐசிஐசிஐ செக்யுரிட்டீஸ் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக வீட்டு உபயோகப் பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால் விலையானது சுமார் 20 சதவீதம் உயர்ந்தது. இந்நிலையில் ஏசி, பிரிட்ஜ், மைக்ரோவேவ், வாஷிங் மெஷின் விலையை நிறுவனங்கள் விரைவில் குறைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.