Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆட்டோ…. மாணவர்கள் மகிழ்ச்சி…!!!!!

கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள் .இவர்கள் அந்த பள்ளிக்கு பல கிராமங்களையும் தாண்டி 8 கிலோமீட்டர் தொலைவில் இருந்து கரடுமுரடான பாதைகளையும், காட்டு வழிகளையும் கடந்து பள்ளிக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. இதை பார்த்த தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட கந்தசாமி என்பவர் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சக ஆசிரியைகளிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

இதனை அடுத்து அனைத்து ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களுடைய சொந்த செலவில் காலையிலும், மாலையிலும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதற்காக ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்ய முடிவெடுத்துள்ளனர்.

அந்த வகையில் மாணவர்கள் பள்ளிக்கு காலையிலும் மாலையிலும் வந்து செல்வதற்காக  மாதம் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஆட்டோ ஏற்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து ஆட்டோ டிரைவர் மாணவர்களுடைய எதிர்காலத்தில் தனக்கும் சிறிய பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக 5000 ரூபாய் வேண்டாம் ரூ.3000 போதும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பள்ளி படிப்பிற்காக தன்னுடைய ஆட்டோ பணியை மகிழ்ச்சியுடன் பள்ளி மாணவர்கள் அழைத்துச் சென்று வருகிறார் வேல்முருகன்.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆட்டோ வசதி ஏற்படுத்தி கொடுத்த ஆசிரியர்களின் இந்த கூட்டு முயற்சிக்கு அந்த பகுதில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆட்டோ ஓட்டுனர் வேல்முருகனையும் பாராட்டுகின்றனர்.

Categories

Tech |