நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மத்திய அரசு பண்டிகை பரிசாக தங்களின் ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதன்படி அகலவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அகலவிலைப்படையை நான்கு சதவீதம் உயர்த்தி வரும் நிலையில் ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிகாரப்பூர்வ அகலவிலை படியை உயர்த்தி அறிவித்துள்ளன.அகலவிலைப்படி மட்டுமல்லாமல் போனஸ் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு தனது போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.மொத்தம் மாநிலத்தில் 93 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனதாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.அதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்காக 45 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.