Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…..! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்….. விஜயதசமிக்கு முன்னாடி PayHike…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விஜயதசமிக்கு முன்பு சம்பள உயர்வை அறிவிக்க 7வது ஊதிய குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வுக்கான அனுமானங்கள் வெளியாகி உள்ளது. மேலும் டி.ஏ.ஓக்கான பரிந்துரை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு அரசு ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு இரண்டு முறை சம்பள உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும். ஜனவரி 2020-ல் 30 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது செப்டம்பர் 28ஆம் தேதி அகவிலைப்படி உயர்வு பற்றி தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி இருந்தால் அகவிலைப்படி உயர்வு 38 சதவீதமாக இருக்கும் என்று 7வது ஊதிய குழுவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வர உள்ளது.

Categories

Tech |