Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி….. அரசு ஊழியர்களுக்கு…. விரைவில் வெளியாகபோகும் சூப்பர் அறிவிப்பு….!!!

அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு ஜாக்பாட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு முதலில் வெளியிட்ட நிலையில், பிறகு வீட்டு வாடகை சலுகை தொடர்பான அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தற்போது அடிப்படை சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடப் போகிறது.

அதாவது சம்பள உயர்வுக்கான  ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைப்போல் முன்னதாக 2016 ஆம் ஆண்டில் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தியுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் ரூபாய் 6000-லிருந்து ரூபாய் 18,000 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி இந்த மாதம் முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் இதன் அதிகரிப்பால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மீண்டும் உயரும். மேலும் அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையாக,ஃபிட்மென்ட்  காரணியை 2.57 சதவீதத்திலிருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 2022-2023  நிதி ஆண்டு தொடங்குவதற்கு முன் இந்த ஃபிட்மென்ட் காரணி குறித்து முடிவு எடுக்கப்படும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Categories

Tech |