தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கொரோனா சிகிச்சை செலவு ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல் உயர்ந்தால், அந்த செலவை தமிழக அரசு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேலும் கூடுதல் சிகிச்சை செலவுக்காக ரூபாய் 1 கோடியே சுழல் நிதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வாரியம், பல்கலைகழகம், போக்குவரத்து கழகம் ஆகிய பொது நிறுவன ஊழியர்களுக்கு இது பொருந்தாது என்று தெரிவித்துள்ளது.
Categories