தேர்தலை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அம்மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். இந்நிலையில் சங்கூர் மாவட்டத்தில் உள்ள துரி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 2 பேர் போட்டியிடும் நிலையில், தேர்தல் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சங்கூர், மலேர்கோட்லா, பர்னாலா போன்ற தொகுதிகளில் வாக்களிக்கும் வேட்பாளர்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் கார்ப்ரேஷன்களில் பணியாற்றுபவர்களாக இருந்தால் அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவர்களுக்கு அன்று ஒரு நாள் மட்டும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும், அவர்களை பணிக்கு வரும்படி கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் அரசு அறிவித்துள்ளது.