Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. ஆண்டுக்கு 2 இலவச சமையல் சிலிண்டர்…. விரைவில் வீடு தேடி….!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா எரிவாயு உருளை திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இது எந்த விதமான மதம்சார்ந்த பண்டிகைகளுக்கு முன்பாக வழங்கப்படாது என்றும், ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த திட்டத்தின் மூலமாக 1.65 கோடி பயனாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டம் ஜனவரி , மார்ச் மற்றும் அக்டோபர், டிசம்பர் மாதங்களில் வழங்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ரேஷன் திட்டத்தை குறித்தும் உத்திரப்பிரதேச அரசு முடிவெடுத்துள்ளதாகவும், இந்த திட்டம் விரைவில் உத்தரபிரதேச மாநிலத்தில் செயல்படுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்ட உள்ளது. உத்தர பிரதேச தேர்தலில் போட்டியிட்டு வென்ற பாஜக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளாக இருந்த இந்த இலவச எரிவாயு உருளை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், அம்மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 4000 கோடி செலவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |