Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. ஆதார் கார்டு மூலமாக புதிய வசதி… வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி…!!!!

ஆதார் கார்டு மூலமாக upi  ஆக்டிவேட் செய்வது வருகிற மார்ச் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்து. 

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் முறையில் பெறுவதற்கு யூபிஐயில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதற்கு ஏடிஎம் தேவைப்படுகிறது. ஏடிஎம் கார்டு  நம்பர், எக்ஸ்பைரி டேட், சிவிவி நம்பர் ஆகியவற்றைப் பதிவிட்டால்தான் அதன் டிஜிட்டல் சேவையை பெற முடியும்.  உதாரணமாக, கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களில் நமது வங்கிக் கணக்கை இணைப்பதற்கு சம்பந்தப்பட்ட ஏடிஎம் கார்டைப் பயன்படுத்துவோம்.

ஒருவேளை ஏடிஎம் கார்டு நம்மிடம் இல்லாவிட்டால் என்ன செய்வது? சிலரிடம் ஏடிஎம் கார்டு இருக்காது.. சிலரிடம் ஏடிஎம் கார்டு இருந்தும் அது ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்காது. அப்போது upi  வசதியை ஆக்டிவேட் செய்ய முடியாது. அதாவது atm கார்டு  இல்லா விட்டாலும் இனி ஆதார் கார்டு மூலம் ஆகவே நம்மால் upi  வசதியை ஆக்டிவேட் செய்ய முடியும்.  ஆதார் கார்டு   மொபைல் நம்பர் ஓடிபி முறையில் இதை நாம் செய்ய முடிகிறது. இந்த வசதி இன்னும் அமலுக்கு வரவில்லை. மார்ச் 15ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சென்ற ஆண்டு  செப்டம்பர் மாதமே இந்த வசதியை  அறிமுகம் செய்வது குறித்த தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் சில காரணங்களால் இது அமலுக்கு வரவில்லை. இந்த வசதி அமலுக்கு வந்தால் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் மிக எளிதாக டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப்  பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |