Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி….! “ஆரம்ப பள்ளிகள் திறப்பு”…. கல்வி அமைச்சர் போட்ட அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்படும் தேதியை கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கொரோனா காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்தது. அதேபோல் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி வரை உள்ள பள்ளிகள் கடந்த 18-ம் தேதியிலிருந்து மூடப்பட்டன. அதனால் ஆன்லைன் வழியாக பள்ளி மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றன. தற்போது தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்காமல் இருந்தது.

இந்நிலையில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனைய பகுதிகளில் 2021 – 22 ஆம் கல்வி ஆண்டுக்கான எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் வருகிற 14-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை அமைச்சர் நமசிவயம் தெரிவித்ததாவது: புதுச்சேரியில் தொற்று பரவ குறைந்துள்ள நிலையில் வருகிற திங்கள் கிழமை முதல் மழலையர் பள்ளிகள் வகுப்பு திறக்கப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார். மழலையர் பள்ளிகள் திறக்கப்படுவதால் தொற்று பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் புதியதாக தேர்வு செய்யப்பட்ட 148 பாலசேவிகா பணியாளர்களுக்கு பணியானை வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |