Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” இனி இதை வைத்தே…. ரேஷனில் பொருள் வாங்கலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும், இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. இதனை ஏழை மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வேலைக்கு செல்லும் இடங்களில் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் சிக்கலை கருத்தில் கொண்டு மத்திய அரசு “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டத்தின்படி புலம்பெயர் தொழிலாளி தான் வேலைக்கு செல்லும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். வேறு ஊர்களுக்கு இடம் மாறி செல்லும்போது ரேஷன் பொருட்கள் வாங்க புதிய ரேஷன் கார்டு பெற தேவையில்லை. ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டு எண் அல்லது ஆதார் எண்ணை எந்த ரேஷன் கடையிலும் தெரிவித்து பயோமெட்ரிக் மூலம் அடையாளத்தை உறுதி செய்துகொண்டு பொருட்கள் வாங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அதே ஊரில் இருந்தாலும் ரேஷன் கார்டு கொண்டு செல்லாமல் ஆதார் எண்ணை தெரிவித்து அடையாள.த்தை உறுதி செய்து கொண்டு பொருட்களை பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |