அண்ணா பல்கலைக்கழகம் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் 12 ஆம் வகுப்பில் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு இந்த வருடம் முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், தமிழகத்தில் ஐடியை முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தொழில் கல்வியை முடித்த சுமார் 2000 மாணவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் உள்ளிட்ட 6 பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகம் உட்பட அதன் உறுப்பு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் தொழில் கல்வியை முடித்த மாணவர்களுக்கு 2 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது