Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. இனி உங்க வீடு தேடி வரும் 2000 ரூபாய்…. மத்திய அரசு அனுப்பும் பணம்…. அதிரடி திட்டம்….!!!!

Pm-kisan திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதே மூன்று தவணைகளாக பிரித்து தவணைக்கு 2000 ரூபாய் வீதம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. கடந்த மே 30ஆம் தேதி இந்த திட்டத்தின் 11 ஆவது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதன்படி 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. அதனால் அவர்கள் பணத்திற்காக அரசு அலுவலகங்களுக்குச் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. இந்நிலையில் வங்கி கணக்கில் 2000 ரூபாய் அனுப்புவதே விவசாயிகளுக்கு பெரும் வசதியாக இருந்து வரும் நிலையில்,இனிவரும் நாட்களில் வீட்டிற்கே நேரடியாக 2000 ரூபாய் டெலிவரி செய்வதற்காக இந்திய தபால் துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதற்காக “ஆப்கா பேங்க், ஆப்கே துவார்” என்ற புதிய திட்டத்தை இந்திய தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய pm-kisan 2000 ரூபாய் பணம் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படும். இந்த பணத்தை தபால் ஊழியர்கள் வீட்டுக்கே டெலிவரி செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |