வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் சிறு தொழில்களுக்கு உதவும் நோக்கத்தில் s.m.p. சாதி உட்சவ் (SMB Saathi Utsav) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நாட்டில் சிறு தொழில்கள் டிஜிட்டல் மயமாவதற்கும், டிஜிட்டல் தளங்களை பயன்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும். ஜெய்ப்பூரில் இருக்கின்ற ஜோரி பஜார் மற்றும் பாப்பு பஜார் ஆகிய சந்தைகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு தொழில்கள் இயங்கி வருகின்றது.
அதில் முதல்கட்டமாக இந்த பஜார் கடையில் உள்ள சிறு தொழில்கள் இடம் வாட்ஸ்அப் தனது புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக சிறு தொழில்கள் வாட்ஸ்அப் தளம் மூலமாக எப்படி விரிவு படுத்துவது,வளர்ச்சி பெறுவது என்பது குறித்த விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்குவதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக வாட்ஸ் அப் தளத்தில் யூபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறு தொழில்களை வாட்ஸ் அப் தளத்தில் கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது சிறு தொழில் செய்வோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.