Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…..! இனி நெட்ஒர்க் ஸ்பீடா இருக்கப்போகுது….. சென்னை உள்பட 13 நகரங்களில் 5ஜி சேவை….!!!!

சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் முதற்கட்ட 5ஜி சேவை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றனர். ஏலம் எடுத்த தொலைத்தொடர்பு நெட்வொர்க்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒப்புதல் மற்றும் ஒதுக்கீடு பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது .

வருகிற 29ஆம் தேதி இந்திய மொபைல் காங்கிரஸ் நடத்தும் தொடக்க விழாவில் 5g நெட்வொர்க்கை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவார் எனவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் முதற்கட்டமாக சென்னை, டெல்லி, அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், காந்திநகர், குரு கிராமம், ஹைதராபாத்,  ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 13 நகரங்களில் 5g சேவை வெளியிடப்பட்டுள்ளது. 4ஜி இணைப்புகளை விட 10 மடங்கு வேகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |