ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பாக புது பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்கவிழா திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது, “புது கல்விக்கொள்கை பற்றிய ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்து உள்ளது.
தற்போது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறைசார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்தில் இது முடிவடையும். அதன்பின் ஜனவரியில் முதல்வரிடம் இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அதை ஆய்வு மேற்கொண்டு ஆணை வெளியிடுவார். அதன்பின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்து உள்ளார். அந்த துறையுடன் இணைந்து விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம். அதன்படி விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு மற்றவகுப்புகள் எடுக்கக் கூடாது என வலியுறுத்தப்படும்.