உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே whatsapp நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. குறிப்பாக தனியுரிமை பாதுகாப்பை அளிக்கும் வகையில் ரீட் ரெபிசீட் மற்றும் மெசேஜ்களுக்கான ப்ளூ டிக்கை மறைத்து வைப்பது போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.அதேசமயம் நீங்கள் whatsapp-யை ஓப்பன் செய்யும்போது ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆன்லைனில் இருப்பதாக மற்றவர்களுக்கு காண்பிக்கும்.
அதனையும் பயனர்கள் தற்போது மறைத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் இண்டிகேட்டர் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்த முடியும். மேலும் குறுஞ்செய்திகளை எடிட் செய்யும் வசதியும் விரைவில் வரவுள்ளது.இதனை தொடர்ந்து whatsapp குரூப்பில் இணைக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது இனி whatsapp குரூப்புகளில் அதிகபட்சமாக 1024 வரை இணைந்து கொள்ள முடியும். முதலில் இந்த புதிய அப்டேட் whatsapp ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷன்களில் வழங்கப்பட்டுள்ளது.மிக விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது.