Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” இனி வெறும் ரூ.30,000 போதும்….. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்….!!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கு செல்லும் மாணவர்கள் படிப்பு முடித்த பிறகு இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற வேண்டும். அதற்கு கட்டணமாக மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வசூல் செய்து வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை 2 லட்சம் வசூல் செய்கிறது. ஆக மொத்தம் பயிற்சிக்காக ரூ. 5 லட்சத்து 20 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் பயிற்சி பெறுவதற்கு ரூபாய் 5 லட்சம் என்பது மிக அதிகமான கட்டணமாக இருப்பதாக அரசிடம் கோரிக்கை இடப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் மருத்துவ பல்கலைக்கழகம் வசூலித்த 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை குறைத்து வெறும் முப்பதாயிரம் மட்டும் செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை வசூல் செய்த 2 லட்சமும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே வெளிநாட்டில் படித்து இங்கு பயிற்சி பெற விரும்ப மாணவர்கள் இனி 30 ஆயிரம் மட்டும் கட்டினால் போதும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |