தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் நடைபெறும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி, தேனி மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தது.
இதனிடையே ஒரு சில மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.