Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” இன்று முதல் இலவசம் இலவசம்….. மாநில அரசின் நச் அறிவிப்பு….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 92 தொகுதிகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. அந்த கட்சியின் சார்பாக முதல்வர் வேட்பாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவர் பதவியேற்றதையடுத்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி பதவியேற்ற உடனே கடந்த மார்ச் மாதத்தில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு வீடு தேடி வரும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில் பஞ்சாப் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிமந்திரி ஹர்பால் சிங்க் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பொது மக்களுக்கான இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கான வாக்குறுதி இன்று(ஜூலை 1) முதல் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.  இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |