டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும் பேடிஎம் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இதில் சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்கள் ரூபாய் 30 வரை கேஷ் பேக் பெறலாம். முன்பே மில்லியன் கணக்கான மக்கள் பேடிஎம் ஆப் மூலம் சிலிண்டர் புக்கிங் செய்யும் நிலையில், தற்போது பாரத் கேஸ் சிலிண்டரும் பேடிஎம் புக்கிங்கில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே புதிதாக இணையும் வாடிக்கையாளர்கள் இந்த அட்டகாசமான சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த சலுகையைப் பெற சிலிண்டர் புக்கிங் செய்யும் போது ‘FIRST CYLINDER’ எனும் புரோமோ கோடை பயன்படுத்த வேண்டும். இந்த வசதியைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பாரத் கேஸ், இண்டேன், ஹெச்.பி. கேஸ் போன்ற மூன்று டீலர்களிடமும் சிலிண்டர் முன்பதிவு செய்து வாங்க முடியும். மேலும் சிலிண்டர் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிலிண்டர் புக்கிங் செய்கையில் பணத்தை செலுத்தத் வேண்டியதில்லை. இதையடுத்து சிலிண்டருக்கான பணத்தை அடுத்த மாதத்தில் செலுத்திக் கொள்ளலாம். இச்சலுகையின் பெயர் ‘paytm now pay later’ ஆகும்.
இந்த சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் ‘FREE GAS’ என்ற புரோமோ கோடை உபயோகிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பேடிஎம் ஆப் மூலம் சிலிண்டர் புக்கிங் செய்தவர்கள் அதன் டெலிவரி எப்போது கிடைக்கும் என்பதையும் டிராக் செய்ய முடியும். இது போன்ற பல்வேறு வசதிகளை பேடிஎம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. சமையல் சிலிண்டர் விலை சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதிகமாக இருக்கும் நிலையில், பேடிஎம் வழங்கும் கேஷ் பேக் சலுகைகள் வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் இந்த சலுகை அந்த ஆப் மூலமாக முதல் முறை சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.