திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பக்கத்தில் உள்ள பகவதிபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் மாணவர்களுடைய வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை கூகுள் நிறுவனத்தின் வழியே ரீடிங் மாரத்தான் என்ற புதிய திட்டத்தை தொடங்க முடிவு செய்தது. இந்த நிலையில் நேற்று முதல் 12ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டு இதில் இல்லம் தேடி கல்வி திட்ட தொழிலாளர்கள் தங்களுடைய செல்போனில் கூகுல் ரீடிங் அலாங் என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து அதன் வழியே எளிய முறையில் மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான துவக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அன்பில் மகேஷ், குழந்தைகளுக்கு வாசிக்கும் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி கூகுள் நிறுவனத்துடன் ஒரு மாதத்திற்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தி உள்ளது. அதன் முக்கிய அம்சம் என்னவென்றால் குழந்தைகளுக்கு வாசிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தான் என்று கூறியுள்ளார்.