Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. தமிழக அரசு போட்ட சூப்பர் ப்ளான்….!!!!

தமிழகத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும்,புனேவில் உள்ள டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்திற்கும் இடையே இன்று மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவது தான் நமது நோக்கம் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த நோக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ரூ.2,877.43 கோடி செலவில் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள்,கருவிகள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவை நிறுவப்பட்டது தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட உள்ளன. இதன் மூலமாக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் பயிற்சி பெற்ற உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுவார்கள்.

அதுமட்டுமல்லாமல் தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன பணியாளர்கள் ஆகியோரும் பயிற்சி பெற்று பயன்பெற முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |