Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” இவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம்….. தமிழக அரசு சூப்பர் திட்டம்…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களும் பொருளாதார ரீதியாக இழப்பை சந்தித்தது. இதனால் நாட்டில் மிகவும் பொருளாதார மோசமடைந்தது. இந்த நிலையில் நலிவடைந்த தொழில் நிறுவனங்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை தொழிலை அதிகரிக்கும் நோக்கமாக முன்வைத்து. இதனையடுத்து கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் விதமாக தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா தொற்று காரணமாக நலிவடைந்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக புதியதாக அரசு கேர் -1 கேர் -2 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் திட்டத்தில் தீவர கொரோனா பரவல் காலமாக இருந்த இரண்டு வருடங்களில் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தாமாக அல்லது வாரிசுகளின் மூலம் தங்களுடைய பழைய தொழிலை தொடங்க அல்லது புதிய தொழிலை தொடங்குவதற்கான கடன் அரசு வழங்க முன் வந்துள்ளது.

இந்த கடன் தொகையில் குறிப்பிட்ட சதவீதம் மானியம் வழங்கப்படும். 20% அல்லது 25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் மேம்பாடு அல்லது நவீனமயமாக்கம் செய்வதற்கு குறிப்பிட்ட சதவீதம் மானியம் வழங்கப்படும். இதனை பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் முழு விவரங்களையும் அரசு அதிகார ப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

Categories

Tech |